கண்ணகி நகர் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 10 மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகின!

சென்னை கண்ணகி நகர் காவல்நிலையத்தில் நேற்று நள்ளிரவு மர்ம கும்பல் ஒன்று புகுந்து பெட்ரோல் குண்டுகள் வீசியதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 -மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சாமபாலாகின
கண்ணகி நகர் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 10 மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகின!

சென்னை கண்ணகி நகர் காவல்நிலையத்தில் நேற்று நள்ளிரவு மர்ம கும்பல் ஒன்று புகுந்து பெட்ரோல் குண்டுகள் வீசியதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 -மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சாமபாலாகின.

சமீபத்தில் துரைப்பாக்கத்தில் பெண் என்ஜீனியரை தாக்கி நகை பறித்த வழக்கில் கண்ணகி நகரை சேர்ந்த  3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கும் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று கண்ணகி நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தது. அக்கும்பல்  போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது..

இதில் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தன. சத்தம் கேட்டு காவலர்கள் வருவத்ற்குள்  மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இது குறித்து துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களுடன், போலீசாரும் சேர்ந்து தீயை அணைத்தனர். 10 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. சேதம் அடைந்த மோட்டார் சைக்கிள்களில் 5 போலீசாருக்கு சொந்தமானது என்று தெரிகிறது. மற்றவை எல்லாம் பல்வேறு  குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும்.

போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் காவல்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com