மூணாறுதலைப்பு அணை பாசனத்துக்காக திறப்பு

நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறுதலைப்புக்கு கல்லணை நீர் வந்தடைந்தது. அதிலிருந்து பாசனத்துக்காக திங்கள்கிழமை காலை நீர் திறந்து விடப்பட்டது.
மூணாறுதலைப்பு அணை பாசனத்துக்காக திறப்பு

நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறுதலைப்புக்கு கல்லணை நீர் வந்தடைந்தது. அதிலிருந்து பாசனத்துக்காக திங்கள்கிழமை காலை நீர் திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணை திறக்கப்பட்டு கல்லணைக்கு வந்த நீரானது நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்புக்கு திங்கள்கிழமை காலை வந்தடைந்தது. விநாடிக்கு 1,504 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மூணாறு தலைப்பு அணையிலிருந்து நீர் திங்கள்கிழமை காலை 6 மணிக்கு பாசனத்துக்காக திறக்கப்பட்டது. இதன்படி கோரையாற்றில் 1,203 கன அடியும், பாமணியாற்றில் 301 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கோரையாறு தண்ணீர் மூலம் 1,20,957 ஏக்கர் நிலமும், பாமணியாற்று தண்ணீர் மூலம் 38,357 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். வெண்ணாற்றில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. சம்பா சாகுபடிக்கு இந்த நீரானது பயன்படும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com