தமிழகத்தில் 60% டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு: பரிதவிக்கும் 'குடி'மகன்கள்

நெடுஞ்சாலையோரங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் 60% டாஸ்மாக் கடைகள் சனிக்கிழமை முதல் மூடப்பட்டன.
தமிழகத்தில் 60% டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு: பரிதவிக்கும் 'குடி'மகன்கள்

சென்னை: நெடுஞ்சாலையோரங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் 60% டாஸ்மாக் கடைகள் சனிக்கிழமை முதல் மூடப்பட்டன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான 'குடி'மகன்கள் பரிதவிப்புக்கு ஆளானார்கள்.

நேற்று தாற்காலிக தடுப்புகள் வைக்கப்பட்டு, கூட்டத்தைக் கலைக்க காவல்துறையை குவிக்கப்பட்டு, ஒருவர் பின் ஒருவர் வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தி, நெரிசலைத் தடுக்க நடவடிக்கை எடுத்தது போன்ற காட்சிகள் நடந்த இடம் ரேஷன் கடையோ, சினிமா தியேட்டரோ அல்ல. வேலூரில் உள்ள டாஸ்மாக் கடையில் தான்.

நெடுஞ்சாலையோரங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் மற்ற எந்த மாவட்டங்களையும் விட வேலூர் மாவட்டம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது. ஏன் என்றால் அங்கு தான், முக்கிய இடங்களில் இயங்கி வந்த 32 டாஸ்மாக் கடைகளில் 31 கடைகள் நெடுஞ்சாலைகளை ஒட்டி இருந்ததால் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் சுமார் 7.5 லட்சம் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

அனைத்து மாவட்டங்களிலும் 50 முதல் 80 சதவீத டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் இயங்கி வந்த 5,700 டாஸ்மாக் கடைகளில் 3,300 கடைகள் மூடப்பட்டதாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத் தலைவர் என். பெரியசாமி கூறினார்.

நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சவாலானப் பணி. டாஸ்மாக் கடைகளை குடியிருப்புகள் இருக்கும் இடத்துக்கு மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும் பெரியசாமி கூறுகிறார்.

பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் திறந்திருந்த டாஸ்மாக் கடைகளில் அதிகக் கூட்டம் காணப்பட்டது.

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சிலர், அருகில் திறந்திருக்கும் டாஸ்மாக் கடைகளில் தாற்காலிகமாக பணி செய்யுமாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

60% டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், டாஸ்மாக் வருமானம் வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு இன்னும் மாற்றுப்பணி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com