துணைநிலை ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அதன் தமிழ்மாநில குழு உறுப்பினர் வி.பெருமாள், பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களிடம் கூறியது:
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் பொறுப்பேற்றது முதல் அதிகார அத்துமீறல்கள் செய்து போட்டி ஆட்சியை நடத்தி வருகிறார். தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக பொதுவெளியில் பேசுவதும், அரசின் அன்றாட  நடவடிக்கைகளை முடக்குவதும் தொடர்கிறது. 

துணை நிலை ஆளுநரின் இந்த செயல் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சி கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானதாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் செயல்பாட்டை முடுக்குவதை ஜனநாயகம் கேலிக்கூத்தாக்குவதை அனுமதிக்காது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் முடிவை செயல்படுத்த ஒத்துழைப்பது, உதவுவதும், அதே நேரத்தில் அரசின் சில முடிவுகளில் மாறுபட்ட கருத்து இருந்தால் உரிய ஆலோசனை வழங்குவதும், மறுபரிசீலனை செய்ய கோரவும் துணை நிலை ஆளுநருக்கு உரிமை உண்டு. மேலும் அமைச்சரவைக்கு, துணை நிலை ஆளுநருக்கும் மாறுபாடு உள்ள விஷயத்தில் குடியரசுத் தலைவர் வழிகாட்டுதல் பெற்று செயல்படுத்த யூனியன் பிரதேசங்களுக்கான சட்டம் குறிப்பிடுகிறது. 

மத்திய பா.ஜ.க. அரசு தன அரசியலுக்கு சாதகமான கருவியாக ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர்களை பயன்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் நகராட்சி ஆணையர் தொடர்பான விவகாரத்தில் துணை நிலை ஆளுநர் தலையிட்டு பேரவைத் தலைவரின் உத்தரவை ரத்து செய்துள்ளார். இந்தச் செயல் பேரவைத் தலைவரின் உரிமையை பறிப்பதாகும்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் அரசும் தான் அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. மாநிலம் வளர்ச்சியின்றி நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

ஆகவே மத்திய அரசு மாநில வளர்ச்சி, மக்கள் நலனை கவனத்தில் கொண்டு புதுச்சேரிக்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் நிதி உதவி வழங்கவும், தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். துணைநிலை ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். 

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்த உள்ளோம் எனத் தெரிவித்தனர்.

முன்னதாக கட்சியின் பிரதேசக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் புதுவையில் தற்போது நிலவும் அரசியல் சூழல்நிலை, கட்சி செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com