சமக தலைவர் சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின் பின்னணி?

சுகாதாரத் துறை அமைச்சர், செயலர் வீடுகளைத் தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சமக தலைவர் சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின் பின்னணி?

சென்னை: சுகாதாரத் துறை அமைச்சர், செயலர் வீடுகளைத் தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கொட்டிவாக்கத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமாரின் வீட்டில் இன்று காலை 8.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி  சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இன்று அவரது இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை வீடு, புதுக்கோட்டை வீடு, கல்லூரிகள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக அரசியல்கட்சிகள் அளித்த புகாரின் பேரில் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், சமக தலைவர் சரத்குமாருக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுகிறது.

அதற்கு பதிலாக, நேற்று தான் டிடிவி தினகரனுக்கு சரத்குமார் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். எனவே, டிடிவி தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவிக்க, சரத்குமார் தரப்புக்கு ரொக்கப் பரிமாற்றம் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில்தான் அவரது வீட்டிலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக உறுதி செய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், டிடிவி தினகரன் அணிக்கு ஆதரவு அளிக்க சரத்குமாருக்கு எவ்வளவு கொடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com