அரசுப் பள்ளிகளில் கல்வி, வேலைவாய்ப்பு ஆலோசனை மையங்கள்:  அமைச்சர் செங்கோட்டையன்

வரும் கல்வி ஆண்டு முதல் வேலைவாய்ப்புக்கான ஆலோசனை மற்றும் உயர் கல்விக்கான வழிகாட்டும் மையங்கள் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்

வரும் கல்வி ஆண்டு முதல் வேலைவாய்ப்புக்கான ஆலோசனை மற்றும் உயர் கல்விக்கான வழிகாட்டும் மையங்கள் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை சார்பில் கிராமப்புற 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான மேற்படிப்பு மற்றும் கல்வி சார்ந்த ஆலோசனை குறித்த வழிகாட்டும் கருத்தரங்கம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம் பொன்மார் பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டுதல் கையேட்டினை வழங்கி அவர் பேசியதாவது:
கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டும் பயிற்சி கருத்தரங்குகள் நடத்துவதன் நோக்கம், எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வித் தரம், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதேயாகும்.
இக்கருத்தரங்குகள் தமிழகத்தில் 1162 இடங்களில் ஏப்ரல் 5, 7ஆம் தேதிகளில் கல்வித் துறை,  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் நடத்தப்படுகிறது. அதிமுக அரசின் 2017-18ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 26,932 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை சார்ந்த விவரங்களையும் இங்கே வழங்கப்பட்டுள்ள கையேட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம். பெற்றோர்களும், மாணவர்களும் இந்த விவரங்களை www.tnscert.org என்ற இணையதளத்தில் காணலாம்.
வரும் கல்வி ஆண்டு முதல் வேலைவாய்ப்புக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டும் மையங்கள் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com