ரூ.89 கோடி சிக்கிய ஆவணம்: எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த திட்டம்

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் பறிமுதல்
ரூ.89 கோடி சிக்கிய ஆவணம்: எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த திட்டம்

சென்னை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடி குறித்தும், ரூ. 89 கோடி ஆவணங்களின் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வருமானவரித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகள் மற்றும் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் ஆகியோரது வீடுகள் என 50 இடங்களில் வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது.

இதில் விஜயபாஸ்கரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடி குறித்தும், ரூ. 89 கோடி ஆவணம் குறித்தும் இருந்ததாகத் தெரிகிறது. இந்த கேள்விகளுக்கு சில பணபரிமாற்றத்துக்கு தன்னிடம் சட்டபூர்வமான ஆதாரங்களும், ஆவணங்களும் இருப்பதாக விஜயபாஸ்கர் கூறினாராம்.

விஜயபாஸ்கர் அளித்த பதில்களில் இருந்தும் அதிகாரிகள் மேலும் கேள்விகளை கேட்டனர். ஆனால் விஜயபாஸ்கரின் பதில்களில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை. இதனால் சுமார் நான்கரை மணி நேர விசாரணைக்கு பின்னர், விஜயபாஸ்கரை அதிகாரிகள் விடுவித்தனர்.

மேலும் ஒரு வாரத்துக்குள் நடைபெறும் அடுத்தகட்ட விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர். அப்போது பணத்துக்குரிய ஆவணங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றுடன் வர வேண்டும் எனவும் விஜயபாஸ்கரிடம் அவர்கள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், வருமானவரித் துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் இன்று அமைச்சருக்கு சொந்தமான கல்குவாரியில் மீண்டும்  மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடி குறித்தும், ரூ. 89 கோடி ஆவணங்களின் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வருமானவரித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com