ஓய்வூதியதாரர் -குடும்ப ஓய்வூதியதாரருக்கு விரைவில் அடையாள அட்டைகள்

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவு:
ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, அடையாள அட்டைகள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் ஓய்வூதிய கணக்கு எண், பெயர், பிறந்த தேதி, பணி ஓய்வு அடைந்த தேதி, வீட்டு முகவரி, புகைப்படம், ஆதார் எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியன தரவு தொகுப்பில் ஏற்கெனவே இருப்பதாக கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கூடுதல் விவரங்களைப் பெற வேண்டுமென கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையாளர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
அதன்படி ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின் ரத்த வகை, ஆதார் எண் ஆகிய விரங்களைச் சேகரிக்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற காலத்தில் வகித்த பதவி, கடைசியாக வாங்கிய ஊதியம், ஊதியதர நிலை உள்ளிட்ட விவரங்களையும் பெற வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளார்.
குடும்ப ஓய்வூதிய பெறுவோரின் வாரிசுகள் 25 வயது வரை இருந்தால் அவர்களது பெயரில் அடையாள அட்டை அளிக்கப்படும். மற்றவர்களுக்கு (மனைவி அல்லது கணவன்) அவர்களின் வாழ்வுக் காலம் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் அடையாள அட்டை கொடுக்கப்படும்.
இந்த அடையாள அட்டையை அரசு இணைய சேவை மையங்கள், பொது சேவை மையங்களில் ரூ.30 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த அடையாள அட்டை வழங்கும் பணிகள் 3 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com