பல்துறை அறிஞராக இருந்தவர் அம்பேத்கர்: ப.சிதம்பரம் புகழாரம்

அம்பேத்கர் பல்துறை அறிஞராக இருந்தார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புகழாரம் கூட்டினார்.
பல்துறை அறிஞராக இருந்தவர் அம்பேத்கர்: ப.சிதம்பரம் புகழாரம்

சென்னை: அம்பேத்கர் பல்துறை அறிஞராக இருந்தார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புகழாரம் கூட்டினார்.
 டாக்டர் அம்பேத்கரின் 127-ஆவது பிறந்தநாள் விழா தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்றது.
 விழாவில் ப.சிதம்பரம் பேசியது:
 அம்பேத்கர் பல்துறை அறிஞராக இருந்தவர். அவருடைய அறிவுத்திறனை அளக்க வேண்டும் என்றால், ஐன்ஸ்டீன், நியூட்டனுடன்தான் ஒப்பிட முடியும். "கற்பி, ஒன்று சேர், போராடு' என்று அம்பேத்கர் கூறினார். இது தலித்துகளுக்கு மட்டுமானது இல்லை. அனைத்து சமுதாய மக்களுக்குமானதாகும்.
 மத்திய பாஜக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் அச்சத்தில் வாழக்கூடிய சூழல் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற அச்சுறுத்தல் இல்லை என்று சொல்ல மாட்டேன்.  ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்களால் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள் என்று சொல்ல முடியாது.
 பாஜக ஆட்சியில் அமைச்சர்களாலேயே மக்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகிறது.  இந்திய அரசியல் சாசனத்தில் பசுவதை கூடாது என்றுதான் இருக்கிறது. பசுவின் இறைச்சியைச் சாப்பிடக் கூடாது என்று இல்லை. ஆனால், மாட்டிறைச்சியை வைத்திருப்பதற்காகவே தாக்குவது, கொல்வது போன்ற நிகழ்வுகள் பாஜக ஆட்சியில் நடந்து வருகின்றன.
  இப்போது கல்லூரி மாணவனும் மாணவியும் ஒன்றாக ரிக்க்ஷôவில் போனால் அடிக்கக்கூடிய நிலை உள்ளது. ஒரு மாணவனும், மாணவியும் நல்ல நண்பர்களாக இருக்கக் கூடாதா? இதுபோல, பென்ஸ் காரில் போகிறவர்களை பாஜகவினரால் அடிக்க முடியுமா? மேட்டுக்குடிக்கு ஒரு நீதி,  ஏழைக்கு ஒரு நீதியா? இந்த மேட்டுக்குடிதனத்தைத்தான் ஒழிக்க வேண்டும் என்று அம்பேத்கர் பாடுபட்டார். அவரின் கொள்கையை பின்பற்றி அனைவரும் பாஜக ஆட்சிக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com