ஹைட்ரோ கார்பன் திட்டம்: நெடுவாசலில் 3-வது நாளாக தொடரும் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நெடுவாசலில் மீண்டும் தொடங்கியுள்ள போராட்டம் 3-வது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது.
நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நெடுவாசலில் மீண்டும் தொடங்கியுள்ள போராட்டம் 3-வது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து, நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாட்டில் அப்பகுதி மக்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, மத்திய, மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியரின் உறுதியளிப்பை ஏற்று போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மார்ச் 27-ம் தேதி ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, புதுகை மாவட்டத்தில் மார்ச் 31-ம் தேதி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், திட்டத்துக்கு எதிராக நெடுவாசல், அதைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, ஏப். 8-ம் தேதி நெடுவாசலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, போராட்டம் குறித்து ஏப். 15-ம் தேதி அறவிப்பதாக நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் பெற்றுள்ள ஜெம் லேபாரட்டரீஸ் நிறுவனம் அதற்கான பணிகளை தொடங்க முயற்சி மேற்கொள்வதாக கூறி, நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே அப்பகுதி இளைஞர்கள், பெண்கள் கடந்த 12-ம் தேதி போராட்டத்தை தொடங்கினர்.
போராட்டம் 3-வது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது. அதில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியபடி, மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com