விவசாயிகள் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்படவேண்டும்: ஜி.கே.வாசன்

விவசாயிகள் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்படவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்படவேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை: விவசாயிகள் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்படவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1.39 அளிவிலும், டீசல் விலையை ரூ. 1.04 அளவிலும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இது கண்டிக்கத்தக்கது.
இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்ந்து ஏழை, எளிய மக்களை பெரிதும் சிரமத்துக்கு ஆளாக நேரிடும்.
இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலையில் நாள்தோறும் மாற்றம் கொண்டுவர புதிதாக முயற்சி எடுத்து வரும் எண்ணெய் நிறுவனத்தினால் வாடிக்கையாளர்கள் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்படும்.
எனவே, பெட்ரோல், டீசல் மீதான விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்யும் முறையை ரத்து செய்துவிட்டு, மத்திய அரசே விலை நிர்ணயம் செய்ய முன்வர வேண்டும்.
வறட்சி காரணமாக இதுவரை தமிழகத்தில் 400 விவசாயிகள் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த வாரம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரும், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரும் மனமுடைந்து உயிரிழந்திருக்கிறார்கள்.
எனவே, விவசாயிகள் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்படவேண்டும். மத்திய அரசும், தமிழக அரசும் ஒருவர் மீது மற்றொருவர் குறை கூறுவது ஏற்புடையதல்ல. இப்பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையே தீர்வாக அமையும்.
அதற்கு ஏற்றவாறு மத்திய, மாநில அரசுகள் விவசாயக்கடனை முழுமையாக தள்ளுபடி செய்து, வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்கி, விவசாயம் பாதிக்கப்பட்டதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் கொடுத்து, காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு அமைத்து - விவசாயிகள் நலன் காக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com