7 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
7 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், ஆந்திரத்தில் இருந்து வறண்ட காற்று வீசியதால் வடதமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசியது. காற்று மீண்டும் ஆந்திரத்தை நோக்கி நகர்ந்ததையடுத்து வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் கோடைக்காலத்தின் இயல்பான வெப்பம் நீடிக்கிறது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
வெப்பச் சலனத்தினால் இடிமேகங்கள் உருவாகி உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.
கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்.
வேலூர், தருமபுரி, நாமக்கல், திருச்சி, கரூர், சேலம், மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்புநிலையைக் காட்டிலும் 2 அல்லது 3 டிகிரி அதிகரிக்கக்கூடும் என்றனர்.
8 இடங்களில் சதம்: வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவானது.
வெயில் நிலவரம்
(ஃபாரன்ஹீட்டில்):
கரூர் பரமத்தி 109
திருச்சி, பாளையங்கோட்டை 105
வேலூர், திருப்பத்தூர், மதுரை 104
சேலம், தருமபுரி 103
சென்னை 99
நாகப்பட்டினம், கோவை 98

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com