நாளை தங்கு தடையின்றி ஆவின் பால் கிடைக்கும்: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி!

நாளை விவசாயிகள் பிரச்சினைக்காக முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் மாநிலம் முழுவதும் தங்கு தடையின்றி ஆவின் பால் ...
நாளை தங்கு தடையின்றி ஆவின் பால் கிடைக்கும்: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி!

சென்னை: நாளை விவசாயிகள் பிரச்சினைக்காக முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் மாநிலம் முழுவதும் தங்கு தடையின்றி ஆவின் பால் கிடைக்கும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதிபட தெரிவித்துள்ளார்.

தமிழக விவசாயிகள் பிரச்சினைக்காக பிரதான எதிர்கட்சியான திமுகவின் ஒருங்கிணைப்பில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் ஆவின் ஊழியர்கள் பங்கேற்பார்கள் எனவும், பால் விநியோகம் இருக்காது என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

நாளை விவசாயிகள் பிரச்சினைக்காக முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் மாநிலம் முழுவதும் தங்கு தடையின்றி ஆவின் பால் கிடைக்கும். மக்கள் சேவைக்காக இரவு 12 மணியிலிருந்தே ஊழியர்கள் தயாராக உள்ளனர். நாளை காலை 6 மணிக்கே பால் விநியோகம் துவங்கி விடும்.

இதில் தடை எதுவும் ஏற்படக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடமையை செய்யாத ஊழியர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் பெருமழை பெய்த பொழுதோ ,வரதா புயல் பாதிப்பின் பொழுதோ ஆவின் விநியோகத்தில் சிறிதும் தடையோ தொய்வோ ஏற்படவில்லை. அதுவே தற்பொழுதும் நிலை நிறுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com