தாராபுரம் அருகே போலி மதுபான ஆலை!

தாராபுரம் அருகே இயங்கி வந்த போலி மதுபான தயாரிப்பு ஆலை ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போலி மதுபான பாட்டில்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட போலி மதுபான பாட்டில்கள்.

தாராபுரம் அருகே இயங்கி வந்த போலி மதுபான தயாரிப்பு ஆலை ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 750 போலி மதுபான பாட்டில்கள், 500 லிட்டர் எரிசாராயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கோவை புறவழிச்சாலையில் மதுவிலக்கு காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை சோதனையிட்டபோது, அதில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, காரில் வந்த சதீஷ்குமார் (23), ரமேஷ் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டு, காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், திருப்பூர் சாலை, வேங்கிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்து மதுபான பாட்டில்கள் கொண்டுவரப்பட்டது தெரிய வந்தது.
காவல்துறையினர் அங்கு நடத்திய சோதனையில், போலி மதுபான தயாரிப்பு ஆலை இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த 750 போலி மதுபான பாட்டில்களையும், 500 லிட்டர் எரிசாராயத்தையும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மதுவிலக்கு காவல்துறையினர், ஆலை உரிமையாளர் செல்லமுத்து என்பவரைத் தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போலி மதுபானங்கள், எரிசாராயம், இயந்திரங்களின் மதிப்பு ரூ. 3 லட்சம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com