விவசாயிகள் பிரச்னையை அரசியலாக்க வேண்டாம்: ஜி.கே. வாசன்

விவசாயிகள் பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என்றார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.
விவசாயிகள் பிரச்னையை அரசியலாக்க வேண்டாம்: ஜி.கே. வாசன்

விவசாயிகள் பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என்றார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் விவசாயிகளின் பிரச்னையில் அரசியல் சாயம் பூசப்படுகிறது. விவசாயிகளின் போராட்டம் மக்களுக்கானது. மக்கள் பிரச்னை விவசாயிகள் வடிவத்தில் நிகழ்ந்து வருவதால், தமிழக அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்னையை அரசியலாக்க வேண்டாம்.
தில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்துக்கு தமாகா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் தீர்வு வரும்போது எந்தக் கட்சியும் உரிமை கொண்டாட வேண்டாம். விவசாயிகளுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம். 
தமிழகத்தில் நெடுஞ்சாலைகளிலிருந்து அகற்றப்பட்ட மதுபானக் கடைகளை வேறு இடத்தில் திறக்க முயற்சிக்கக் கூடாது. படிப்படியாக மதுக் கடைகளை மூடவேண்டும். ஏற்கெனவே, மூடப்பட்ட மதுபானக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும். மத்திய அரசு ஒற்றைத் தீர்ப்பாயத்தை கொண்டுவர சட்ட முன்மொழிவு செய்துள்ளது. காவிரிப் பிரச்னையில் இறுதித் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழக உரிமை நீரை பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும். அதிமுகவின் இரு அணிகளும் ஒருங்கிணைய குழு அமைக்கப்பட்டு, பேச்சுவார்த்தை நடப்பதாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இதில் சுமுக நிலை ஏற்படவேண்டும் என்பதே தமாகாவின் எதிர்பார்ப்பு என்றார் ஜி.கே.வாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com