முழு அடைப்பு எதிரொலி: புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சியினர் மறியல் போராட்டம்; 4 தமிழக அரசு பஸ்கள் கண்ணாடி உடைப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக புதுவையில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முழு அடைப்பு எதிரொலி: புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சியினர் மறியல் போராட்டம்; 4 தமிழக அரசு பஸ்கள் கண்ணாடி உடைப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக புதுவையில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 300-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

4 தமிழக அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் புதுவையில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக ஆட்டோ்க்கள், டெம்போக்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. தமிழக அரசு பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. இந்நிலையில் புதுச்சேரி புதிய பஸ் நிலைய வாயிலில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  தெற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. உள்பட பல்வேறு கட்சிகளை சார்ந்த  நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக பஸ்களை இயக்கக்கூடாது என போராட்டக்காரர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தி கைது செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதே போல் புதிய பஸ் நிலையம் எதிரே 30-க்கு மேற்பட்ட இளைஞர் காங்கிரசார் மாநில தலைவர் இளையரஜா தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீஸார் மடக்கி கைது செய்தனர்.

4 தமிழக பஸ்கள் மீது கல்வீ்ச்சு, கண்ணாடி உடைப்பு
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு சென்ற தமிழக அரசு பஸ் மீது வெங்கட்ட சுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே மீது கல் வீச்சு நடைபெற்றதில் கண்ணாடி உடைப்பு.

அதே போல் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்றுகொண்டிருந்த தமிழக அரசு பேருந்தின் மீது இந்திராகாந்தி சதுக்கம் அருகே கல் வீச்சு, பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

புதுச்சேரியில் இதுவரை 4 தமிழக அரசு பஸ்களின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன. இதையடுத்து தமிழக பஸ்கள் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com