சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: சேகர் ரெட்டி உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

புதிய ரூபாய் நோட்டுக்களை பதுக்கி சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைதான தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி

புதிய ரூபாய் நோட்டுக்களை பதுக்கி சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைதான தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
புதிய ரூபாய் நோட்டுக்களை பதுக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில், தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தது.
அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 20 -ஆம் தேதி பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், மூன்று பேருக்கு எதிராக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி மூன்று பேரும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஏப்ரல் 7 -ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சேகர் ரெட்டி உள்ளிட்ட மூவரும் சென்னை உயர்நீ திமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.பாஸ்கரன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நடைபெற்ற அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின்பு, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் ரத்தினம், ராமசந்திரன் ஆகியோர் முன்ஜாமீன் கோரிய மனுக்கள் மீதான விசாரணையை முடித்து, தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அமலாக்கத் துறைக்கு அனுமதி: இந்த நிலையில், இந்த வழக்கில் தொழிலதிபர் சேகர் ரெட்டி, பிரேம் குமார், சீனிவாசலு ஆகியோரின் நீதிமன்ற காவலை மே மாதம் 10 -ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மூவரையும் 5 நாள்கள் சிறையில் சென்று விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்தும் நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com