50 ஆண்டுகள் கடந்தும் அதிமுக ஆட்சி செய்யும்: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

தமிழகத்தில் 50 ஆண்டுகள் கடந்தும் அதிமுக ஆட்சி செய்யும் என்றார் பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன்.
தொட்டியம் கொங்குநாடு கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்கிறார்  அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
தொட்டியம் கொங்குநாடு கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

தமிழகத்தில் 50 ஆண்டுகள் கடந்தும் அதிமுக ஆட்சி செய்யும் என்றார் பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் தோளூர்பட்டியில் உள்ள கொங்குநாடு கல்லூரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை சனிக்கிழமை தொடக்கி வைத்து, அவர் மேலும் பேசியது:
போட்டியில் பங்கேற்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3000 மாற்றுத் திறனாளிகள் வந்துள்ளனர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3000, மூன்றாம் பரிசாக ரூ. 2000 வழங்கப்படும். விளையாட்டுத் துறையில் உள்ள 3000 மாற்றுத் திறனாளிகளுக்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூ. 1000 என ரூ. 10,000 ஊக்கத்தொகை வழங்குவதற்கு தனியார் நிறுவனத்தினர் முன்வருகின்றனர். இதற்கான ஆணை விரைவில் பிறப்பிக்கப்படும். அதிமுக அரசு இந்த 5 ஆண்டுகளை நிறைவு செய்வதோடு, வரும் 50 ஆண்டுகள் கடந்தும் அதிமுக தான் ஆட்சி செய்யும். அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளி மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படும் திட்டங்களை செயல்படுத்த இந்த அரசு உதவும். நாட்டில் தேர்தல் தேதியை அறிவிப்பார்கள். ஆனால், இந்த அரசு தேர்வு தேதியை அறிவித்து சிறப்பாக செயலாற்றி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, பிற்பட்டோர் நலத் துறை அமைச்சர் வளாóமதி, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல், முசிறி எம்.எல்.ஏ. செல்வராஜ், முன்னாள் அமைச்சர் சிவபதி, திருச்சி எஸ்பி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, கொங்குநாடு கல்லூரித் தலைவர் பெரியசாமி வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com