அதிமுக உள்கட்சிப் பிரச்னையில் ஆதாயம் தேடப் பார்க்கிறது திமுக

அதிமுக உள்கட்சிப் பிரச்னையில் ஆதாயம் தேடப் பார்ப்பது திமுக தானே தவிர பாஜக அல்ல என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
அதிமுக உள்கட்சிப் பிரச்னையில் ஆதாயம் தேடப் பார்க்கிறது திமுக

அதிமுக உள்கட்சிப் பிரச்னையில் ஆதாயம் தேடப் பார்ப்பது திமுக தானே தவிர பாஜக அல்ல என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அரசியல் நிலையற்ற தன்மையால் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சில இடங்களில் திமுகவே போராட்டங்களைத் தூண்டி விடுகிறது. அதிமுக உள்கட்சிப் பிரச்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு அரசியலில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னையை பயன்படுத்தி திமுக ஆதாயம் தேடப் பார்க்கிறது. அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் கட்சிக்கு கொண்டுவர மாவட்டச் செயலர்களை, திமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால், திமுகவுக்கு செல்ல எந்த அதிமுகவினரும் விரும்பவில்லை என்பதே உண்மை.
பாஜக அரசியலில் வளர்ச்சி பெறவும், ஆட்சி அமைக்கவும் விரும்புவது இயற்கை. பாஜக தன்னை பலப்படுத்தியே வளர விரும்புகிறது. ஆனால், பாஜக மீது தேவையற்ற விமர்சனம் வைக்கப்படுவது சரியல்ல. அதிமுக உள்கட்சி மோதலால் தேர்தல் விரைவில் வரலாம்.
ஆனால், தேர்தல் கூட்டணி குறித்து பாஜக முடிவெடுக்க தக்க தருணம் இதுவல்ல. தமிழை வளர்ப்பதில் மற்ற அரசியல் கட்சிகளை விட பாஜக தனிக்கவனம் செலுத்தும். ஆனால், மத்திய அமைச்சரை எப்படி வரவேற்று நடத்துவது என்ற நாகரீகம் தெரியாத தமிழ் அமைப்புகள் தமிழை வளர்ப்பதாகக் கூறுவது வேடிக்கையாகும் என்றார்.
செயற்குழுக் கூட்டம்: பழங்காநத்தம் அழகப்பன்நகர் ரயில்வே கேட் அருகே நடைபெற்ற பாஜக மாநகர் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்துக்கு மாநகர் மாவட்டத் தலைவர் சசிராமன் தலைமை வகித்தார். இதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
மாநகர் மாவட்ட துணைத் தலைவர்கள் ஹரிகரன், குமார், து.பாலமுருகன், சோலையழகுபுரம் போஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com