சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 40 தானியங்கி கைத் துப்பாக்கிகளை தில்லி குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல்

மத்தியபிரதேசதம், பிகார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தயாரிக்கப்படும் கள்ளத் துப்பாக்கிகள், தானியங்கி கைத் துப்பாக்கிள், தலைநக

புதுதில்லி: மத்தியபிரதேசதம், பிகார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தயாரிக்கப்படும் கள்ளத் துப்பாக்கிகள், தானியங்கி கைத் துப்பாக்கிள், தலைநகர் தில்லியில் விற்பனை செய்யப்படுவதாக குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆயுதங்களை விற்பனை செய்யும் குழுவைப் பிடிக்க குற்றப்பிரிவு போலீஸார் தனிக்குழு அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், தில்லியில், மர்மநபர் ஒருவர் 40 தானியங்கி துப்பாக்கிகளை கைமாற்றியபோது பிடிபட்டார். அவரிடமிருந்து துப்பாக்கிகளை வாங்க வந்த நபரும் கைது செய்யப்பட்டார்.

மேலும், அவர்களிடமிருந்த 40 விலையுயர்ந்த நவீன தானியங்கி கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தில்லி குற்றப்பிரிவு போலீஸார், இதுவரை சுமார் 400 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பல்வேறு கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com