முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை... பின்பற்றுவோர்?:  கமல்ஹாசன்

‛முந்தி செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை' என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை... பின்பற்றுவோர்?:  கமல்ஹாசன்

சென்னை: ‛முந்தி செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை' என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக சமூக ஊடகங்களில் அறிவிக்கை அளித்து வருகிறார். இதற்கு தமிழக அமைச்சர்கள், கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து வருகின்றன. பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சித்தனர்.

ஊழல் புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு ஊழல் புகாரை தெரிவியுங்கள் என கமல் மக்கள் மற்றும் ரசிகர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இந்த அறிவிப்பு வெளியானதுமே அமைச்சர்களின் இணையபக்கங்கள் சில செயல்படவில்லை. தொடர்ந்து கமல்ஹாசன், தமிழக அரசியல் பற்றியும், ஊழல் பற்றியும் குரல் எழுப்பி வருகிறார்.

இதனிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடந்த முட்டை ஊழலை அம்பலப்படுத்திய தனது நற்பணி இயக்கத்திற்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இயக்க வழக்குரைஞர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என தெரிவித்திருந்த அவர் சட்ட மீறல் நம் தரப்பில் கூடாது என்றும் கூறியிருந்தார். அடுத்தடுத்து, கமல் வெளியிட்டு வரும் கருத்து, அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் நேற்று இரவு ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், Dr. நீர் சொன்னீர் வழிமொழிகிறேன். முந்தி செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை எனவும் பின்பற்றுவோர் தொண்டர் அல்ல மக்களும், குடியரசு புரிந்ததா? என கேள்வி எழுப்பி பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனின் இந்த டிடுவிட்டர் பதிவுக்கு ஒரு மணி நேரத்திற்குள் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்திருந்தனர். சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதில் தெரிவித்து டுவிட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com