சொத்துக் குவிப்பு: சசிகலா உள்ளிட்டோரின் சீராய்வு மனு மீது இன்று விசாரணை இல்லை

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோரின் சீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு: சசிகலா உள்ளிட்டோரின் சீராய்வு மனு மீது இன்று விசாரணை இல்லை


புது தில்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோரின் சீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான ரோஹிண்டன் பாலி நாரிமனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான ரோஹண்டன் பாலி நாரிமன் வழக்கிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, சசிகலா உள்ளிட்டோரின் சீராய்வு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்த அமர்பில் புதிய நீதிபதி அறிவிக்கப்பட்டப் பிறகே சீராய்வு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மூவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com