நீட் விலக்கு: மத்திய அரசு உறுதி

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
நீட் விலக்கு: மத்திய அரசு உறுதி

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி, தில்லி சென்ற அமைச்சர் 3 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை சென்னை திரும்பினார்.
அப்போது அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆகஸ்ட் 31 -ஆம் தேதிக்குள் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும். எனவே குறுகிய காலக்கெடுவைக் கருத்தில் கொண்டு, கடந்த கல்வியாண்டைப் போன்று நிகழாண்டிலும் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில அரசின் சார்பில் அவசரச் சட்ட முன்மொழிவு மத்திய உள்துறை அமைச்சகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியையும் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் சட்ட சிக்கல் இருப்பதாகவும், அதனை எப்படி தீர்ப்பது என்பது குறித்த சாத்தியங்களை ஆராய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவையும் சந்தித்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க உதவும் வகையில் பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளை ஆதாரமாகக் காட்டினோம். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
எல்லா மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டாலும், தமிழகம் மட்டுமே நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com