டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருக்கிறாரா?: அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

கட்சியின் பொதுச் செயலாளர் குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால், துணைப் பொதுச் செயலாளர் பதவி கேள்விக்குறியானது என கூறிய
டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருக்கிறாரா?: அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி


சென்னை: கட்சியின் பொதுச் செயலாளர் குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால், துணைப் பொதுச் செயலாளர் பதவி கேள்விக்குறியானது என கூறிய அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி.தினகரன் அறிவித்த நிர்வாகிகள் பட்டியலும் கேள்விக்குறியே என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு அரசியல் நடவடிக்கைகளில் களம் இறங்கியுள்ள அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது ஆதரவாளர்களாகவும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் உள்ள 19 பேருக்கு கட்சிப் பொறுப்புகள் தொடர்பாக அதிரடியான அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

இந்நிலையில், தில்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நிதியமைச்சர் ஜெயக்குமார் புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு சென்னை பட்டினம்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஜிஎஸ்டி குறித்து 60க்கும் மேற்பட்ட தொழில்துறையினர், வரி குறைப்பு குறித்த மனு அளித்துள்ளதாகவும், அதை மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, டிடிவி தினகரன் அறிவித்த புதிய நிர்வாகிகள் பட்டியல் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்கையில், கட்சியின் பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு, நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், துணைப் பொதுச் செயலாளர் எனக் கூறிக்கொள்ளும் தினகரனின் பதவியே கேள்விக்குறியாக இருக்கும்போது, அவர் அறிவித்த புதிய நிர்வாகிகள் பட்டியலும் கேள்விக்குறியே என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

டிடிவி. தினகரன் அறிவித்த பதவிக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பழனி, பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com