3 நாள்களில் முடிகிறது பி.இ. கலந்தாய்வு: நிரம்பாத 1 லட்சம் இடங்கள்

பொறியியல் கலந்தாய்வு நிறைவுபெற இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில், திங்கள்கிழமை வரை 70 ஆயிரம் பேர் மட்டுமே பொறியியல் படிப்புகளில் கலந்தாய்வு மூலம் சேர்க்கை பெற்றுள்ளனர்.

பொறியியல் கலந்தாய்வு நிறைவுபெற இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில், திங்கள்கிழமை வரை 70 ஆயிரம் பேர் மட்டுமே பொறியியல் படிப்புகளில் கலந்தாய்வு மூலம் சேர்க்கை பெற்றுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன.

கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கிய பி.இ. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் வெள்ளிக்கிழமை (ஆக.11) நிறைவுபெற உள்ளது.
இந்தப் பிரிவினருக்கென இடம்பெற்றிருந்த 1,75,456 பி.இ. இடங்களை நிரப்ப, திங்கள்கிழமை வரை 1,08,690 பேர் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.
இவர்களில் , 70,741 பேர் மட்டுமே இதுவரை இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். 37,468 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. கலந்தாய்வுக்கு வந்தவர்களில் 481 பேர் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.
சேர்க்கை பெற்றவர்களில் 14,751 பேர் பி.இ. இயந்திரவியல் பிரிவையும், 13,885 பேர் பி.இ. மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் பிரிவையும், 11,861 பேர் பி.இ. கணினி அறிவியல் பிரிவையும் தேர்வு செய்துள்ளனர்.
பி.இ. சிவில் பிரிவில் 25,257 இடங்கள் உள்ளபோதும், இதுவரை 6,234 பேர் மட்டுமே இந்தப் பிரிவைத் தேர்வு செய்துள்ளனர்.
இதுபோல பி.இ. தமிழ் வழி இயந்திரவியல் பிரிவில் உள்ள 719 இடங்களில் இதுவரை 205 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. பி.இ. தமிழ் வழி சிவில் பிரிவில் இடம்பெற்றிருக்கும் 659 இடங்களில் 168 இடங்கள் நிரம்பியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com