அமித்ஷா வருகை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்: தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
அமித்ஷா வருகை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்: தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழக அரசியலில் உள்ள குழப்பங்களுக்கு பாஜக எந்த விதத்திலும் காரணம் அல்ல. அதிமுக அணிகளை பின்னாலிருந்து பாஜக இயக்குகிறது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் சொல்வதில் அர்த்தம் ஏதுமில்லை.
தமிழகத்தில் ஆட்சி நிலையாக இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். எனவேதான் அதிமுக பிளவு இல்லாமல் ஒன்றுபட வேண்டும் என விரும்புகிறது. மத்திய, மாநில அரசுகளிடம் இணக்கம் தேவை என்றுதான் நினைக்கிறோமே தவிர இயக்க நினைக்கவில்லை.
அமித்ஷா வருகை: பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான நோக்கத்துடன் அமைந்துள்ளது. அவரது தமிழக வருகையே அனைவருக்கும் வழிகாட்ட வேண்டும் என்பதே. அவரது தமிழக வருகை நிச்சயமாக தமிழக அரசியலில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நீட் தேர்வு: உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படியே நீட் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்துக்கு ஏற்கெனவே ஓராண்டு விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் விலக்கு அளிப்பது சரியல்ல என்ற கருத்தை நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களும், பெற்றோர்களும் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்காகத் தவிப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்த விஷயத்தில் நல்ல முடிவு விரைவில் வரும். அது சட்டத்துக்கு உட்பட்டதாக அமையும். இதில், அரசுப் பள்ளிகள் படித்த ஏராளமான ஏழை மாணவர்களும் இருக்கின்றனர்.
காங்கிரஸ்}திமுக கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிராக அவர்களே இன்று முரண்பட்டுப் பேசுவது ஆச்சரியமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com