கொடைக்கானலில் வன உயிரினச் சரணாலயம் அமைக்கப்படும்: மத்திய அமைச்சர்

கொடைக்கானலில் சுற்றுலா இடங்கள், விவசாயம் பாதிக்கப்படாத வகையில், வன உயிரினச் சரணாலயம் அமைக்கப்படும் என, மத்திய சுற்றுலாத் துறை மற்றும் கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா (குல்லா அணிந்திருப்பவர்).

கொடைக்கானலுக்கு சனிக்கிழமை இரவு வருகை தந்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, அப்சர்வேட்டரி மற்றும் ஏரிச்சாலைப் பகுதியிலுள்ள ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, கொடைக்கானலில் அப்பர் லேக் வியூ, படகு குழாம், ஏரிச்சாலை, பூங்கா சாலை உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது: கொடைக்கானல் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. கொடைக்கானலில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மலைப் பகுதிகளிலுள்ள சாலைகளை இணைப்புச் சாலைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பழனி}கொடைக்கானல் ரோப் கார் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானல்}மூணாறு சாலையை திறப்பதற்கு வனத்துறை உயர் அதிகாரிகளிடமும், கேரள அரசிடமும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
கொடைக்கானலில் ஹெலிபேட் அமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இங்கு வாகன நெரிசலைப் போக்குவதற்காக அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்தம் அமைக்கப்படும்.
இங்கு, வன உயிரினச் சரணாலயம் அமைத்தால், விவசாயம், சுற்றுலா பாதிக்கப்படும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவை பாதிக்கப்படாத வகையில், வன உயிரினச் சரணாலயம் அமைக்கப்படும் என்றார்.
முன்னதாக, மத்திய அமைச்சரை வட்டாட்சியர் பாஷியம், சுற்றுலா அலுவலர் உமாதேவி, உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்த், வருவாய்த் துறை ஆய்வாளர் கருப்பசாமி உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com