சுமார் 700 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டெடுப்பு

புதுக்கோட்டை அருகே உள்ள எல்லைப்பட்டி கிராமத்தில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டிய தகவல் அடங்கிய பழைமை வாய்ந்த கல்வெட்டு சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டோடு புதுகை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர், பயிற்சி மாணவர்கள் உள்ளிட்டோர். (வலது) புதுக்கோட்டை அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு.
எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டோடு புதுகை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர், பயிற்சி மாணவர்கள் உள்ளிட்டோர். (வலது) புதுக்கோட்டை அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு.

புதுக்கோட்டை அருகே உள்ள எல்லைப்பட்டி கிராமத்தில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டிய தகவல் அடங்கிய பழைமை வாய்ந்த கல்வெட்டு சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினரால் கல்வெட்டு மற்றும் தொன்மை பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட்டு வந்தன. அப்போது, சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு, குளம் வெட்டப்பட்ட தகவலடங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தொல்லியல் ஆய்வுக்கழகத் தலைவர் தலைவர் மேலப்பனையூர் ராஜேந்திரன், அமைப்பின் நிறுவனர் மங்கனூர் ஆ. மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோரால் கல்வெட்டு படியெடுக்கப்பட்டது.
இதுகுறித்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் மேலும் கூறியது:
எல்லைப்பட்டி பள்ளி சுற்றுச்சுவரின் அருகிலேயே நீர்வரத்து, வடிகால் அமைப்புடன் பழைமையான குடிநீர்க்குளம் உள்ளது.
இது 700 ஆண்டுகளுக்கு முன்பு தென்க வீர நாடன் என்பவரால் அமைக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்தும் வகையில் "ஷஸ்....ஸ்ரீ இக்குள(ம்).....(தெ)ன்க..வீர நாடன்" என்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் எழுத்தமைப்பு அடிப்படையில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை அறிய முடிகிறது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள், பொதுநல நோக்கில், மக்களின் குடிநீர், வேளாண் தேவைக்கென குளங்களையும், நீர்ப்பாசனக் கட்டமைப்பு ஆகியவைகளை ஏற்படுத்தியுள்ளதை இக்கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.
நமது முன்னோர்கள் ஏற்படுத்திய இத்தகைய நீர் மேலாண்மை கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றை தற்போதைய இளம் தலைமுறையினர் சிதைத்து விடாமலும், ஆக்கிரமிப்புகளுக்கு உட்படுத்தாமலும் சமூக அக்கறையோடு பாதுகாக்க வேண்டும். மேலும், இக்கல்வெட்டு ஒரு சமூக வரலாற்று ஆவணமாக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com