உற்பத்தித்துறை ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்: நிர்மலா சீதாராம

சேவைத்துறையில் ஏற்றுமதி வளர்ந்துள்ள நிலையில், உற்பத்தி துறையில் ஏற்றுமதி குறைந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்து உற்பத்தித் துறை ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய தொழில்
சிறந்த நிறுவனங்களுக்கு விருது வழங்குகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன் மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் தொழில் நிறுவனர்கள்.
சிறந்த நிறுவனங்களுக்கு விருது வழங்குகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன் மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் தொழில் நிறுவனர்கள்.

சேவைத்துறையில் ஏற்றுமதி வளர்ந்துள்ள நிலையில், உற்பத்தி துறையில் ஏற்றுமதி குறைந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்து உற்பத்தித் துறை ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சென்னை ஏற்றுமதி மண்டலம் (மெப்ஸ்) சார்பில், ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது:
சென்னையில் பெரும் வெள்ளம் வந்து பாதிப்பை சந்தித்த நிலையில், சிறப்பு ஏற்றுமதி மண்டலத்தில் உள்ளவர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். கஷ்டமான சூழ்நிலையில், ஏற்றுமதியில் எந்தவிட தடங்கலும் இல்லாமல் வெற்றி பெற்றுள்ளனர். இது மிகச் சிறப்பானது.
இங்கிருந்து உற்பத்திப் பொருள்களும், சேவைகளும் ஏற்றுமதியாகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறை உள்பட பல சேவை துறைகளில் ஏற்றுமதி நன்றாக உள்ளது. ஆனால், பொருள்கள் ஏற்றுமதி குறைந்துள்ளது.
சேவைத் துறையில் ஏற்றுமதி நன்றாக இருப்பதால், நஷ்டம் ஈடுகட்டப்படுகிறது.
ஆய்வு வேண்டும்: உற்பத்தித் துறை ஏற்றுமதி ஏன் குறைகிறது என்று தீவிரமாக யோசிக்க வேண்டும். இது குறித்து விரிவாக ஆய்வு செய்து தெரிவித்தால் அதற்கு தீர்வு காணலாம்.
இது தொடர்பாக மாநில அரசிடம் பேசியுள்ளேன்.
ஆட்டோமொபைல் துறையில் முன்னிலை மையமாக இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் ஆட்டோ மொபைல் சார்ந்த முதலீடு வர வேண்டும். அதற்கு மாநில அரசு முயற்சி எடுக்க வேண்டும். முதலீடு வேறு மாநிலத்துக்குப் போகிறது என்பதை விட எனது மாநிலத்துக்கு ஏன் வரவில்லை என்று யோசித்தால் நன்றாக இருக்கும். தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஒரு குழுமம் அமைக்கவேண்டும்.
பெட்ரோல் இறக்குமதிக்கு அதிகமாகச் செலவிடப்படுகிறது. இதைக் குறைக்க மின்சாரப் பேருந்துகளை உள்நாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கான லித்தின், ஆயான் பேட்டரிகளை உள்நாட்டில் தயாரித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆட்டோ மொபைல் துறை மேலும் வலிமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com