நீட் அவசரச் சட்டம்: அமைச்சர் தில்லி பயணம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு பெறுவதற்கான அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை இரவு தில்லி புறப்பட்டுச்
நீட் அவசரச் சட்டம்: அமைச்சர் தில்லி பயணம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு பெறுவதற்கான அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை இரவு தில்லி புறப்பட்டுச் சென்றார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனையடுத்து அவரசச் சட்டத்துக்கான முன்வரைவு மத்திய உள்றை அமைச்சகத்திடம் ஆகஸ்ட் 14 -ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநர் செந்தில் ராஜ் ஆகிய மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் தில்லியில் முகாமிட்டு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரையும் அவரசச் சட்டத்துக்கான பணிகளைக் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் திட்டங்கள் சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு தில்லி புறப்பட்டுச் சென்றனர்.
சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்து அவசரச் சட்டம் குறித்த அறிவிப்பு புதன்கிழமை மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com