பெண்களுக்கு சம நீதி, சம உரிமை கிடைக்கவில்லை

பெண்களுக்கு சம நீதி, சம உரிமைகள் மறுக்கப்படும் நிலை நீடிக்கிறது என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசினார்.
பெண்களுக்கு சம நீதி, சம உரிமை கிடைக்கவில்லை

பெண்களுக்கு சம நீதி, சம உரிமைகள் மறுக்கப்படும் நிலை நீடிக்கிறது என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசினார்.
திருப்பரங்குன்றத்தில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை விடுதலை போராட்ட வீரர் கே.பி.ஜானகியம்மாள் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஜனநாயக மாதர்சங்க மாவட்ட செயலர் முத்துராணி முன்னிலை வகித்தார்.
இதில் கனிமொழி பேசியது:
71-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நமது நாட்டில் பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணங்கள் இன்று வரை நடக்கின்றன. பெண்களுக்கு சம நீதி, சம உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நமது உரிமைகளை நாமே எடுத்துக்கொள்ள வேண்டும். பல துறைகளிலும் பெண்கள் அடிமைத் தனம் நீடிக்கிறது. இதற்கு எதிராக பெண்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். காலங்காலமாக பெண்கள் மீது பல விஷயங்கள் திணிக்கப்பட்டு வருகின்றன.
அதுபோன்ற தடைகளை உடைத்தெரிய வேண்டும். பெண்களை பாதுகாக்க பல சட்டங்கள் உள்ளன. எனினும் வசதியில்லா அப்பாவிகளே பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் 2005-இல் 37 சதவீத பெண்கள் பணிக்கு சென்றனர். ஆனால் தற்போதைய கணக்கின்படி 27 சதவீதம் பேர்களே பணிக்கு செல்கின்றனர். பெண்களுக்கு கல்வி கொடுக்கும் குடும்பத்தினர் அவரை பணிக்கு செல்ல அனுமதிப்பதில்லை. பாதுகாப்பின்மையே அதற்கு காரணம்.
புராணங்களில் இருந்து தற்போதுவரை பெண்களின் திறமை, வீரம் வெளிகொண்டுவரப்படவில்லை. மகளிர் மசோதாவை அனைத்து கட்சிகளும் ஆதரித்தாலும் அது இன்றளவும் நிரைவேற்றப்படவில்லை. உள்ளாட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு இடதுக்கீடு செய்பவர்கள் பாராளுமன்றத்தில் இடஒதுக்கீடு செய்ய மறுக்கின்றனர். எல்லா சமூகத்திலும் ஒடுக்கப்படுவது பெண்களாகத்தான் உள்ளனர். பெண்கள் ஏன் என கேள்வி கேட்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வருங்கால சமூதாயம் பெண்கள் சமுதாயமாக இருக்கும்.
புதுதில்லியில் போராடும் விவசாயிகளை யாரும் கண்டு கொள்வதில்லை. இங்கு விவசாயத்தை காப்பாற்றற யாரும் இல்லை. தமிழக அரசு தம்மை காப்பாற்றிக்கொள்வதிலேயே அக்கறை
காட்டுகிறறது. மக்களை காப்பாற்ற நினைக்கவில்லை என்றார்.
நிகழ்ச்சியில் மத்திய குழு உறுப்பினர் பொன்னுத்தாய் வரவேற்றார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பாலபாரதி, ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி, அவனியாபுரம் நகர்மன்ற முன்னாள் தலைவர் பால்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலர் பெ.சண்முகம், தனியார் நிறுவன இயக்குநர் வாசுதேவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com