ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் பணியிட மாற்றம்

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் இருவர் இறந்த சம்பவம் தொடர்பாக ஒரு மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் இருவர் இறந்த சம்பவம் தொடர்பாக ஒரு மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த 13-ஆம் தேதி, ஆம்பூர் அருகே நடந்த விபத்தில் காயமடைந்த சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் (65), சந்தானம் (84) ஆகிய இருவரும், இருதய நோய் பாதிப்பால் ராள்ளகொத்தூர் காலனியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவி வைஷ்ணவி (13) ஆகியோர் சிகிச்கைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் ராஜ்குமார், வைஷ்ணவி ஆகிய இருவரும் இறந்தனர்.
இதையடுத்து ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலராக இருந்த ஷர்மிளா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். மருத்துவர் கென்னடி மருத்துவ அலுவலராக திங்கள்கிழமை பொறுப்பேற்றார். மேலும், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் சாந்தி விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து, மருத்துவப் பணிகள் இயக்குநரகம் மூவர் குழுவினரை நியமித்தது. அதன் பேரில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அக்குழுவினர் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். மேலும், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் இயக்குநர் பானு மருத்துவமனையை ஆய்வு செய்தார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 13-ஆம் தேதி பணியில் இருந்த மருத்துவர் சங்கீதா அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கண்துடைப்புக்காக...
கடந்த 13-ஆம் தேதி இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இருவர் இறந்த சம்பவத்துக்கு முன்பே மருத்துவர் சங்கீதா, தன்னை அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என மருத்துவப் பணிகள் உயரதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அவரை பணியிட மாற்றம் செய்திருப்பது அவருடைய விருப்பத்தின் பேரில் தான் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இது வெறும் கண்துடைப்புக்காக நடைபெற்ற பணியிடமாற்றம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com