தேசிய அளவிலான ஆராய்ச்சி கட்டுரைப் போட்டி: பெங்களூரு மாணவி முதலிடம்

சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான ஆராய்ச்சி கட்டுரைப் போட்டியில் பெங்களூருவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான ஆராய்ச்சி கட்டுரைப் போட்டியில் பெங்களூருவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இளம் ஆராய்ச்சியாளர்களை இனம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில், தில்லியில் உள்ள ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஜெர்மன் ஹவுஸ் அமைப்பும், சென்னை ஐஐடி-யும் இணைந்து 'தி ஃபாலிங் வால்ஸ் லேப் இந்தியா' என்ற தேசிய அளவிலான போட்டியின் இறுதிச் சுற்றை சென்னை ஐஐடி வளாகத்தில் நடத்தின.
இந்தப் போட்டியில் பங்கேற்பவர்கள், அவர்களின் ஆராய்ச்சித் திட்டம் அல்லது தொழில் திட்டம் அல்லது தொழில் முனைவுத் திட்டத்தை மூன்று நிமிடங்களில் போட்டி நடுவர்கள் முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து 14 பேர் பங்கேற்று, தங்களுடையத் திட்டங்களைச் சமர்ப்பித்தனர்.
இதில், பெங்களூரு ஜவாஹர்லால் நேரு உயர் விஞ்ஞான ஆராய்ச்சி மைய மாணவி எகாஷ்மி ரத்தோர் முதலிடம் பிடித்து அசத்தினார்.
இவர், 'நாளைய சமூகத்துக்கான பாதுகாப்பான குடிநீர்' என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்திருந்தார்.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஜெர்மனியில் விரைவில் நடைபெற உள்ள உலக அளவிலான இறுதிப் போட்டியில் பங்கேற்கும் தகுதியை எகாஷ்மி பெற்றிருப்பதுடன், உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் பங்கேற்கும் மதிப்புமிக்க 'ஃபாலிங் வால்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்கான அனுமதியும் இவருக்குக் கிடைத்துள்ளது. இவருக்கான செலவுகள் அனைத்தையும் தில்லியில் உள்ள ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஜெர்மன் ஹவுஸ் அமைப்பு ஏற்றுக்கொள்ளும்.
இவருக்கு அடுத்தபடியாக, இளம் தொழில் முனைவோரான முருகேசன் வெங்கடேசன் இரண்டாம் இடத்தையும், சச்சின் துபே மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
வெற்றியாளர்களுக்கு சென்னை ஐஐடி-யில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி மற்றும் சென்னைக்கான ஜெர்மன் துணைத் தூதர் மைக்கேல் வெக்னர் பரிசுகளை வழங்கினர் கௌரவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com