விவசாயிகளைப் பற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படுவதில்லை: துரைமுருகன்

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர்.

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறினார்.
திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காஞ்சிபுரம் காவலான்கேட்டில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கண்டன உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசும், மாநில அரசும் விவசாயிகளைப் பற்றி கவலைப்படுவது இல்லை.
கடந்த 6 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக அரசு விவசாயிகளை திரும்பிக்கூட பார்க்க
வில்லை. 300 கோடி, 400 கோடி ரூபாய் மதிப்பீடுகளில் ஏரிகளைத் தூர்வாருகிறோம் என திட்டங்களை அறிவித்தனர். அதன்படி எந்தெந்த ஏரிகள் தூர்வாரப்பட உள்ளன என்ற பட்டியலை சட்டப்பேரவையில் கேட்டபோது, இதுவரை பதில் இல்லை. ஓபிஎஸ், எடப்பாடி இணைவார்களா, தினகரன் கரைசேருவாரா என்ற நிலையில் அதிமுக உள்ளது. மக்களைப் பற்றியும், மக்களின் நலனிலும் அக்கறை இல்லாத அரசாக அதிமுக அரசு உள்ளது. எனவே மக்களும், விவசாயிகளும் எழுச்சியுடன் போராட வேண்டும். திமுக ஆட்சியில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன் மூலம் 250 டிஎம்சி தண்ணீர் பெற்றுத் தரப்பட்டது. நீர்ப் பாசன ஆணையம் அமைக்க வேண்டும் என்றார்.
திமுக மாவட்டச் செயலாளர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், மாவட்டத் தலைவர் மதியழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கலைவடிவன், மாவட்ட துணைச் செயலாளர் திருமாதாசன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் முத்துக்குமார், நேரு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாராயணசாமி, சீனிவாசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் அல்லா பாட்ஷா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ஷாஜகான், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அசோகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தீனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com