சர்க்கரை மானியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சர்க்கரைக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை கிலோவுக்கு ரூ.28.50-ஆக உயர்த்த வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்க்கரை மானியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சர்க்கரைக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை கிலோவுக்கு ரூ.28.50-ஆக உயர்த்த வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் வெள்ளிக்கிழமை எழுதிய கடித விவரம்: அந்தியோதயா அன்ன யோஜனா பயனாளிகளுக்கு ஒரு கிலோ சர்க்கரையை ரூ.18.50 என்ற விலையில் வழங்கிடும் நடவடிக்கை குறித்து தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். சர்க்கரையின் அளவும் மாதத்துக்கு 1 கிலோவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மானிய விலையிலான சர்க்கரையானது அனைத்து முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
மானிய விலை சர்க்கரை: மானிய விலை சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.18.50 என்பது கடந்த 2002-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது சர்க்கரையின் சந்தை விலை ரூ.32-ஆக இருந்தது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் இந்த சர்க்கரை கிலோவுக்கு ரூ.13.50-ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இப்போது சர்க்கரை விலை வெளிச்சந்தையில் கிலோ ரூ.42-ஆக உள்ளது.
இதனால், கிலோவுக்கு ரூ.10 என்ற கூடுதல் செலவை மாநில அரசே ஏற்க வேண்டியுள்ளது. எனவே, கடந்த 2002-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருந்த மானிய விலை சர்க்கரையின் அளவை ரூ.18.50 என்ற நிலையில் இருந்து கிலோவுக்கு ரூ.28.50 என்ற விலைக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ சர்க்கரை என அளவும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு இது மிகவும் குறைவானது. தமிழகத்தில் இப்போது ஒரு குடும்ப அட்டைக்கு 2 கிலோ சர்க்கரை அளிக்கப்படுகிறது. அதாவது நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் ஒருவருக்கு 0.5 கிலோ சர்க்கரை கொடுக்கப்படுகிறது. இப்போது வழங்கப்படும் இந்த அளவானது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் உள்ளது.
அதிகரிக்க வேண்டும்: தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களில் சர்க்கரையும் ஒன்றாகும். பொது விநியோகத் திட்டத்தில் மாதத் தேவையாக சர்க்கரையின் அளவு 35 ஆயிரத்து 500 மெட்ரிக் டன்னாக உள்ளது. மானியத்தை உயர்த்தாத பட்சத்தில் முழுமையான நிதிச் சுமையை மாநில அரசே ஏற்க வேண்டி வரும். எனவே, முன்னுரிமை அடிப்படையிலான குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் மானிய விலையிலான சர்க்கரையை விரிவுபடுத்தும் விஷயத்தில் தாங்கள் தலையிட வேண்டும். மேலும், மானியத்தின் விலையை ஒரு கிலோ சர்க்கரைக்கு ரூ.18.50 என்ற விலையில் இருந்து ரூ.28.50-ஆக உயர்த்த வேண்டும். வெளிச்சந்தையில் சர்க்கரையின் விலையானது ரூ.42-ஆக இருப்பதை தாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மாநில அரசானது இப்போது வழங்கும் சர்க்கரையின் அளவினைப் பாதுகாத்திட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com