தமிழக ரயில்வே திட்டங்கள்: இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் சுரேஷ் பிரபு

தமிழக ரயில்வே திட்டங்களை, கோவா மாநிலத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
தமிழக ரயில்வே திட்டங்கள்: இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் சுரேஷ் பிரபு

தமிழக ரயில்வே திட்டங்களை, கோவா மாநிலத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
சென்னை கோட்டத்தைப் பொருத்தவரை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் ஓய்வறை, எல்ஈடி விளக்கு வசதி, திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் புதிய நடை மேம்பாலம், கிண்டி ரயில் நிலைய மேற்குப் பகுதியில் மீண்டும் பயணச்சீட்டு மையம், சேப்பாக்கம் ரயில்நிலையத்தில் 2 நகரும் படிக்கட்டுகள், செங்கல்பட்டு, காட்பாடி ரயில் நிலையங்களில் கம்பியில்லாத வை-ஃபை இணைய வசதி, காட்பாடி ரயில் நிலையத்தில் தகவல் மையம், கண்காணிப்பு கேமரா வசதி, அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஃபுட் பிளாசா ஆகியவற்றை அவர் தொடங்கி வைக்கிறார்.
திருச்சி கோட்டத்தில், திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் செயலி அடிப்படையிலான டாக்சி முன்பதிவு வசதி, பாபநாசம், மன்னார்குடி, திருச்சி கோட்டை, திருச்சி சந்திப்பு ஆகிய 4 ரயில் நிலையங்களில் புதிதாக வாகனங்கள் நிறுத்தும் வசதியை ரயில்வே அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
இதேபோல், மதுரை கோட்டத்தில் மணப்பாறை - கல்பாத்திசத்திரம் இடையே 23 கி.மீ. நீளத்துக்கு இருவழிப் பாதை, 5 ரயில்வே சிறு சுரங்கப் பாதைகள், சோழவந்தான், அம்பாதுறை, சமயநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் தலா ஒரு நடை மேம்பாலம் ஆகியவற்றையும் ரயில்வே அமைச்சர் தொடங்கி வைப்பார்.
சேலம் கோட்டத்தில், சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் விஐபி தங்குமிடம், நீட்டிக்கப்பட்ட நடை மேம்பாலம், சாம்பல்பட்டியில் ஒரு நடை மேம்பாலம் ஆகியவற்றையும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைக்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com