திருவாரூரில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: முதல்வர் பங்கேற்கிறார்

திருவாரூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்கிறார்.
திருவாரூரில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: முதல்வர் பங்கேற்கிறார்

திருவாரூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்கிறார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மாவட்டங்கள் வாரியாக நடத்தி வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர்-தஞ்சை சாலையில் வன்மீகபுரம் அம்மா மைதானத்தில் சனிக்கிழமை (ஆக.19) மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது. விழாவுக்கு சட்டப் பேரவைத் தலைவர் ப. தனபால் தலைமை வகிக்கிறார். தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் முன்னிலை வகிக்கிறார். விழாவில், எம்ஜிஆர் உருவப்படத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி விழா பேருரையாற்றுகிறார். மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார். விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் கே. கோபால், கு. பரசுராமன் வாழ்த்திப் பேசுகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தின் சட்டபேரவை உறுப்பினர்களான முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, ப. ஆடலரசன், டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் பெயர்களும் அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளன.
விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முன்னதாக காலை 8.15 மணிக்கு விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆரின் அரிய புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைக்கின்றனர். அதைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மாணவ, மாணவிகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மதியம் 3 மணிக்கு எம்ஜிஆர் புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்கிறார். மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் நன்றி கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com