பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டி வரியுடன் இணைக்க வேண்டும்: லாரி உரிமையாளர் சம்மேளனம்

பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டி வரியுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சங்ககிரியில் நடைபெற்ற மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டி வரியுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சங்ககிரியில் நடைபெற்ற மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழுக் கூட்டம் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க வெள்ளி விழா கட்டட வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தலைமை வகித்துப் பேசினார்.
நாமக்கல், சேலம், எடப்பாடி வேலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர்கள், செயலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டி வரியின் கீழ் மத்திய அரசு கொண்டுவர வேண்டும், மத்திய அரசு லாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 5 சதவீதம் கூடுதலாக ஏற்றிக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளதை மாநில அரசும் நடைமுறைப்படுத்த வேண்டும், லாரி தொழிலை மத்திய, மாநில அரசுகள் அங்கீகாரம் செய்து தனி நல வாரியம் அமைக்க வேண்டும், லாரிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நெடுஞ்சாலை ரோந்து காவல் வாகனத்தில் பணியாற்றும் போலீஸார் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், சோதனை என்ற பெயரில் லாரிகளை நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com