அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் கிடைக்க நதிகளை மீட்டெடுக்க வேண்டும்: ஜக்கி வாசுதேவ்

அடுத்த தலைமுறையினருக்குத் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நதிகளை மீட்டெடுக்க வேண்டும் என சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார்.
அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் கிடைக்க நதிகளை மீட்டெடுக்க வேண்டும்: ஜக்கி வாசுதேவ்

அடுத்த தலைமுறையினருக்குத் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நதிகளை மீட்டெடுக்க வேண்டும் என சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார்.
'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' என்ற இயக்கத்துக்காக, சென்னை கோட்டூர்புரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:
யோகா, ஆன்மிகம் என்பதைக் கடந்து, ஒரு சமூக அக்கறையோடு 'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' என்ற புதியத் திட்டத்தை கோவை ஈஷா அறக்கட்டளை அறிமுகம் செய்துள்ளது. நதிகளும் ஆறுகளும் வற்றிக்கொண்டே வருகின்றன. இதற்கான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. முதலில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
நதிகளை எல்லாம் மீட்டெடுத்து, தண்ணீர் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டிய ஓர் இயக்கம், திட்டம்தான் இது. இதற்கு மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் 80009 80009 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டுகால் கொடுப்பதுதான். ஒருகோடி பேர் கொடுக்கும் இந்த மிஸ்டுகாலின் மூலமாகத்தான் இந்தத் திட்டத்தின் வெற்றி உள்ளது. அதன் மூலம்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
நிரந்தரத் தீர்வு கிடைக்கும்: இதன் மூலம் தண்ணீர் பிரச்னைக்கும், விவசாயிகளின் பிரச்னைக்கும் நிரந்தரமான தீர்வு கிடைக்கும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் விழிப்புணர்ச்சிப் பயணம் மேற்கொள்கிறேன்.
முதல்கட்ட மாக வரும் செப்டம்பர் 3 -ஆம் தேதி கோவையிலிருந்து தொடங்கி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், மதுரை உள்பட இந்தியா முழுவதும் 31 மாநிலங்களில் 7,000 கி.மீ. தொலைவு பயணித்து, இறுதியில் தில்லியில் சென்று மத்திய அரசிடம் மனுவைக் கொடுக்க இருக்கிறேன்.
நாம் தான் கடைசி தலைமுறை என்பது போல் இப்போது ஆகிவிட்டோம். அடுத்த தலைமுறைக்குத் தண்ணீரும், சத்தான மண்ணும் நம்மிடம் கிடையாது. இதற்கு வழிவகை செய்வதற்காகக்தான் இப்படியொரு திட்டத்தை அறிவித்திருக்கிறோம். அடுத்த தலைமுறையினருக்குத் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும் என்றால், வறண்டு போய்க்கிடக்கும் நதிகளை மீட்க வேண்டும் என்றார் சத்குரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com