தேர்தல் ஆணையத்தை அணுகுகிறது பழனிசாமி தரப்பு: ஆளுநருடன் மைத்ரேயன் சந்திப்பு

அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் விரைந்து வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது. இதற்காக இந்த வார இறுதியில் தில்லி சென்று
தேர்தல் ஆணையத்தை அணுகுகிறது பழனிசாமி தரப்பு: ஆளுநருடன் மைத்ரேயன் சந்திப்பு

அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் விரைந்து வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது. இதற்காக இந்த வார இறுதியில் தில்லி சென்று அதற்கான உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது.
அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி ஆகிய இரண்டு அணிகளும் இணைந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக திங்கள்கிழமை அறிவித்தனர்.
ஆனாலும், டிடிவி தினகரன் தரப்பில் இருந்து அதிமுக அம்மா சார்பில் எனக் கூறி அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதை உடனடியாகத் தடுத்து நிறுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரு அணிகள் இணைக்கப்பட்டதற்கான எழுத்துப்பூர்வ ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அணிகள் இணைக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
ஆளுநருடன் மைத்ரேயன் சந்திப்பு: அணிகள் இணைப்பு, தேர்தல் ஆணையத்தை அணுகுவது போன்ற விஷயங்கள் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் 15 நிமிஷங்கள் நடைபெற்றன.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்துப் பேசிய பிறகு, மைத்ரேயனின் சந்திப்பு நடந்தது.
அதிமுக அணிகள் இணைப்பில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்குப் பிறகே, பெரும்பான்மை பலம் உள்ளிட்ட விஷயங்களில் ஆளுநர் முடிவு எடுக்கக் கூடும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com