ராஜிவ் கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ முக்கிய அறிக்கை தாக்கல்! 

ராஜிவ் கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பான முக்கிய அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்  செய்துள்ளது.
ராஜிவ் கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ முக்கிய அறிக்கை தாக்கல்! 

புதுதில்லி: ராஜிவ் கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பான முக்கிய அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்  செய்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருப்பவர் பேரறிவாளன். அவர் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கி கொடுத்ததாகத்தான், தான் கைதுசெய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவிப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த வெடிகுண்டு என்ன வகையானது என்பது பற்றி ஆரம்ப கட்ட  விசாரணைகளிலிருந்தே தெளிவான பதில்களோ , தகவலோ இல்லை என்று அவர் தனது மனுவில்  குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனுவானது கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ராஜிவ் கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பான விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக அந்த வழக்கு இன்று நீதின்றதில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் சீலிட்ட கவர் ஒன்றை தாக்கல்  செய்தது. அதில் ராஜிவ் கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பான முக்கிய தகவல்கள் இருக்கலாம் என்று தெரிகிறது.

ஆ னால் அறிக்கையில் உள்ள விபரங்கள் தற்பொழது வரை வெளியாகவில்லை.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com