'மருந்தியல் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு'

ஆண்டுதோறும் உள்நாட்டில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் மருந்து விற்பனை அதிகரித்து வருவதால், மருந்தியல் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று இந்திய மருந்து உற்பத்தியாளர்கள்
வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மருந்தியல் கல்லூரி தொடக்க விழாவில், பல்கலை. பதிவாளர் வி.முருகேசன், துணைவேந்தர் சாகுல் ஹமீது அபுபக்கர்,
வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மருந்தியல் கல்லூரி தொடக்க விழாவில், பல்கலை. பதிவாளர் வி.முருகேசன், துணைவேந்தர் சாகுல் ஹமீது அபுபக்கர்,

ஆண்டுதோறும் உள்நாட்டில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் மருந்து விற்பனை அதிகரித்து வருவதால், மருந்தியல் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஜெ.ஜெயசீலன் கூறினார்.
சென்னையை அடுத்த வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மருந்தியல் கல்லூரி தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:
உலகில் மருந்து தயாரிப்பு தொழிலில் 3 -ஆவது இடத்தைப் பெற்றுள்ள இந்தியா ரூ.2.1 லட்சம் கோடி வர்த்தகத்தை எட்டிப் பிடித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.1.3 லட்சம் கோடி மதிப்புள்ள மருந்துகளை உலகெங்கும் சுமார் 220 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதர நாடுகளை ஒப்பிடும்போது இந்திய மருந்துகளின் தரம் உயர்வாகவும், விலை நியாயமாகவும் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது.
அமெரிக்காவில் தற்போது பயன்பாட்டில் உள்ள 40 சதவீத மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது, மருந்தியல் துறையில் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் உலகச் சந்தையில் இந்தியா முதலிடத்தைப் பெற வாய்ப்புள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com