தருமபுரியில் 842, கிருஷ்ணகிரியில் 1,352 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 1,169 விநாயகர் சிலைகளில் 842 சிலைகள் ஞாயிற்றுக்கிழமை நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி அணையில் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யும் பக்தர்கள்.
கிருஷ்ணகிரி அணையில் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யும் பக்தர்கள்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 1,169 விநாயகர் சிலைகளில் 842 சிலைகள் ஞாயிற்றுக்கிழமை நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், மொரப்பூர், காரிமங்கலம், நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மொத்தம் 1,169 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சிலைகளுக்கு தினமும் பூஜைகள் செய்யப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இச் சிலைகளில் 842 சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
முன்னதாக, சிலைகளும் மேள தாளத்துடன் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. பின்னர், மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டிருந்த ஒகேனக்கல், தொப்பையாறு, பஞ்சப்பள்ளி அணை, இருமத்தூர் தென்பெண்ணை ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழித்தடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில்...: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நீர்நிலைகளில் மொத்தம் 1,352 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி, பர்கூர், ஒசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, ராயக்கோட்டை, காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி , மத்தூர், சிங்காரப்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 1,762 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
கோயில்கள், மக்கள் கூடும் இடங்கள், வீடுகள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களால் வைக்கப்பட்ட இந்தச் சிலைகளுக்கு நைவேத்யம் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்தச் சிலைகள் 3, 5 ,7, 9 ஆகிய நாள்களில் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 1,352 சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பூஜைக்கு பின்னர் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
மாவட்டத்தில் கிருஷ்ணகிரி காவல் உள்கோட்டத்தில் கிருஷ்ணகிரி அணையில் 307 சிலைகளும், ஊத்தங்கரை பாம்பாற்றில் 265 சிலைகளும், இருமத்தூர் தென்பெண்ணை ஆறு, பாரூர் ஏரியில் பர்கூர், போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 240 சிலைகளும், ஒசூர், தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 540 சிலைகள் அந்தப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளிலுமாக மொத்தம் 1,352 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com