தமிழக ஆளுநருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் திடீர் சந்திப்பு

தமிழக அரசியல் நிலவரம் குறித்து தமிழக ஆளுநருடன் திருமாவளவன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று காலை சந்தித்துப் பேசினர்.
தமிழக ஆளுநருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் திடீர் சந்திப்பு


சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து தமிழக ஆளுநருடன் திருமாவளவன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று காலை சந்தித்துப் பேசினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்  செயலர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 4 தலைவர்களும் இன்று காலை ஆளுநர் மாளிகைக்குச் சென்றனர்.

ஆளுநர் மாளிகையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த தலைவர்கள், தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என்று 4 வலியுறுத்தினர்.

ஏற்கனவே திமுக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆளுநரை சந்தித்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி தமிழக முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிடக் கோரியிருந்த நிலையில், இன்று மேலும் 4 அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com