குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு

குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்துவரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு

குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்துவரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
பேரருவியில் அதிகாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் சீறிப் பாய்ந்தது. ஐந்தருவியில் அனைத்துக் கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. 
பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லும் பாதை வரை தண்ணீர் சீறிப் பாய்ந்தது. இதனால், குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, பெய்துவரும் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 
மரம் விழுந்தது: தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும் சாலையில் மகளிர் கல்லூரி விளக்கு பகுதியில் புங்கை மரம் சாய்ந்து விழுந்தது. இதில் மின்கம்பம் சேதமடைந்தது. இதையடுத்து, பேரூராட்சி அதிகாரிகளும், மின்வாரிய அலுவலர்களும் இணைந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். கோட்டாட்சியர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com