துப்புரவுப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தல்

பள்ளிகளில் கழிவறைகள் மற்றும் வகுப்பறை தூய்மைப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளிகளில் கழிவறைகள் மற்றும் வகுப்பறை தூய்மைப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ம.பொ.சி. நகரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளைக் கொண்டு கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்ததாக அந்தப் பள்ளித் தலைமையாசிரியை மணிமேகலை புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை. 
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளின் வளாகம், கழிப்பறைகள் மற்றும் வகுப்பறைகளைச் சுத்தம் செய்யும் பணியினை பள்ளியில் பணியாற்றும் துப்புரவாளர்களைக் கொண்டு செய்ய வேண்டும். 
துப்புரவுப் பணியாளர்கள் இல்லாத நிலையில் தினக்கூலி அடிப்படையில் தேவையான பணியாளர்களை அமர்த்தி தூய்மைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும் மாணவர்களை இந்தப் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com