'ஒக்கி' புயல் பாதிப்பு: மத்திய குழு விரைவில் தமிழகம் வருகை

தமிழகத்தில் 'ஒக்கி' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரண மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக மத்திய குழு விரைவில் தமிழகம் வரவுள்ளது என்று மக்களவைத் துணைத் தலைவர்
'ஒக்கி' புயல் பாதிப்பு: மத்திய குழு விரைவில் தமிழகம் வருகை

தமிழகத்தில் 'ஒக்கி' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரண மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக மத்திய குழு விரைவில் தமிழகம் வரவுள்ளது என்று மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார். 
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் ஏழுமலை, காமராஜ், முத்துக்கருப்பன் ஆகியோர் புதன்கிழமை காலை நேரில் சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் மு.தம்பிதுரை கூறியதாவது:
பிரதமர் உறுதி: நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை காலை அனுசரிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் நினைவு தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தேன். அப்போது, தமிழகத்தில் ஏற்பட்ட 'ஒக்கி' புயல் பாதிப்பு குறித்து எடுத்துரைத்தேன். புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் நிவாரண உதவி நடவடிக்கைகளை எடுத்துக் கூறினேன். மேலும், கடலில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க கப்பற்படையின் உதவியையும், நிதியுதவியையும் கோரினேன். ஆவன செய்வதாக பிரதமர் உறுதியளித்தார்.
ஜேட்லியுடன் சந்திப்பு: பிரதமருடன் இருந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரிடம் இருமுறை பேசியதாகவும் தேவையான உதவிகள் செய்வதாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை நானும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரில் சந்தித்துப் பேசினோம். அப்போது தமிழகத்தில் ஏற்பட்ட 'ஒக்கி' புயல் பாதிப்பு குறித்தும், தமிழக முதல்வரின் கோரிக்கை குறித்தும் அமைச்சரிடம் எடுத்துக் கூறினோம். இப்புயலால் தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அதற்கு நிவாரண உதவியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை புயல் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்காக தமிழகத்துக்கு வெகு விரைவில் அனுப்பிவைப்பதாக அவர் உறுதி கூறியுள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார். இதனால், அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
விஷால் விவகாரம்: நடிகர் விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுகவை தொடர்புபடுத்துவது சரியல்ல. தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையம்தான். இதில் மாநில அரசோ, மத்திய அரசோ தலையிட முடியாது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்து வருகின்றன. மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள்தான் முடிவு எடுப்பார்கள் என்றார் தம்பிதுரை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com