டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைப்பதில் மேலும் சிக்கல்

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைப்பதில் மேலும் சிக்கல்


சென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட இடைத் தேர்தலில், டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். 

இந்த நிலையில், இந்த இடைத் தேர்தலிலும் தனக்கு தொப்பி சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அதே சமயம் பல சுயேச்சை வேட்பாளர்கள் தொப்பி சின்னம் கேட்டதால், குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார்.

ஆனால், சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கிய பிறகு, பதிவு செய்யப்பட்ட கட்சிகளான நமது கொங்கு முன்னேற்றக் கழகம் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர்கள் தொப்பி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு கோரியிருக்கின்றனர்.

சின்னம் ஒதுக்குவதில், பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை என்பதாலும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் தான் சின்னம் ஒதுக்கப்படும் என்று அறிவித்திருப்பதாலும், தொப்பி சின்னம் டிடிவி தினகரனுக்குக் கிடைப்பதில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com