நாகை, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதைத் தொடர்ந்து, நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்டுள்ள ஒன்றாம் எண் புயல் கூண்டு. 
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்டுள்ள ஒன்றாம் எண் புயல் கூண்டு. 

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதைத் தொடர்ந்து, நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
நாகப்பட்டினம்: அந்தமான் அருகே வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதாக கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததைத் தொடர்ந்து, நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
புயல் உருவாகக் கூடிய திடீர்க் காற்றுடன் மழை பெய்யும் வானிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் தூர முன்னறிவிப்பாக இந்த எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
இருப்பினும், புதன்கிழமை பகல் நேரத்தில் நாகை மாவட்டத்தில் எந்தப் பகுதியிலும் மழையில்லை. பெரும்பாலான நேரங்களில் வெயிலும், அவ்வப்போது மந்தமான வானிலையும் நிலவியது.
மீன்பிடிப்பு பாதிப்பு: கடந்த 3 நாள்களாக நாகை மாவட்டத்தில் மழை சீற்றம் இல்லை எனினும், மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையின் பேரில், மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பைத் தவிர்த்துள்ளனர். நாகை மாவட்டத்தில் கடந்த நவ. 24-ஆம் தேதி முதல் கடல் சீற்றம் மற்றும் மழை சீற்றம், வானிலை எச்சரிக்கை ஆகியவற்றின் காரணமாக ஆழ்கடல் மீன்பிடிப்பு தடைபட்டுள்ளது.
காரைக்கால்: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தையொட்டி, காரைக்கால் மார்க் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது. காரைக்கால் பகுதியில் கடல் இயல்பு நிலையிலேயே காணப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டுச் சென்றனர். புதன்கிழமை காலை மாவட்டத்தில் பரவலாக லேசான மழை பெய்தது.
ராமேசுவரம்: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி உள்ளதன் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் புதன்கிழமை ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இந்நிலையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு புதன்கிழமை ஏற்பட்டது. ஆழ்கடலில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்ல வேண்டாம் என ஏற்கெனவே வானிமை மையம் அறிவுறுத்தி உள்ளது. 
இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 1500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 4500 க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் 6 ஆவது நாளாக மீன்பிடிக்க செல்லாமல் உள்ளன. இதனால் 30 ஆயிரம் மீனவர்கள் மற்றும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com