160 கி.மீ. வேகத்தில் இயங்கும் "ரயில் 18' பெட்டிகள்!

மணிக்கு160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படக் கூடிய "ரயில் 18' என்னும் புதிய வகையிலான ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணி ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளது என ஐ.சி.எஃப். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
160 கி.மீ. வேகத்தில் இயங்கும் "ரயில் 18' பெட்டிகள்!

மணிக்கு160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படக் கூடிய "ரயில் 18' என்னும் புதிய வகையிலான ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணி ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளது என ஐ.சி.எஃப். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாண்டு நாடு முழுவதும் பல்வேறு ரயில் விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. கடைசியாக உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழப்பும் ஏற்பட்டது. இதையடுத்து ரயில்வே வாரிய உறுப்பினர் மற்றும் அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு ஆகியோர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர். இந்த விபத்துகளை அடுத்து ரயில்வே அமைச்சகத்தின் உத்தரவின்படி, இப்போது நடைமுறையில் இருக்கும் பெட்டிகள் தயாரிப்பை நிறுத்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கடந்த 60 ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வந்த பெட்டி உற்பத்தி இம்மாதத்துடன் நிறுத்தப்பட்டது. 
அதன் பிறகு, 2018-19 ஆம் ஆண்டில் இருந்து ஜெர்மன் தொழில்நுட்பத்தில் அதிநவீன இலகுரக எல்எச்பி பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், சென்னை ஐ.சி.எஃப். நிறுவனத்தில் இந்த நிதியாண்டில் 400 எல்எச்பி வகை பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளது. இந்த பெரும் மாற்றத்துக்கான புதிய வகை பெட்டிகளுக்கு "ரயில் 18' என பெயரிடப்பட்டுள்ளது.
வேகம் அதிகம்: இலகுரக பெட்டிகள் என்பதால் இனி விரைவு ரயில்களின் வேகம் குறைந்தபட்சம் மணிக்கு 160 கி.மீ.க்கு இருக்கும். இப்போது இருப்பதுபோல ரயில் எஞ்ஜின் தனியாகவும், பெட்டிகள் தனியாகவும் இருக்காது. எஞ்ஜினுடன் சேர்ந்து பெட்டியும் வருவதால், எப்போது வேண்டுமானாலும் ரயிலின் வேகத்தை, கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும் என ஐ.சி.எஃப். பொறியாளர்கள் தெரிவித்தனர்.
முதல் கட்டமாக பெருநகரங்களை இணைக்கும் வகையில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ள "ரயில்-18' ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பெட்டிகளைக் கொண்ட முதல் ரயில் 2018 மார்ச்சில் தயாராகும். இந்த ரயில் சென்னை - பெங்களூர் இடையே இயக்க வாய்ப்புள்ளதாகவும் ஐ.சி.எஃப். வட்டாரங்கள் தெரிவித்தன. 
ரூ.350 கோடியில்: ஐ.சி.எஃப். நிறுவனத்தில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் எல்.எச்.பி., ரயில் பெட்டிகள் தயாரிப்பதற்கான வசதிகள் ரூ. 350 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எல்.எச்.பி., பெட்டிகள் தயாரிக்க தேவையான தளவாடங்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டுள்ளன.
"மேக் இன் இந்தியா' திட்டத்தில், முழுவதும் இந்தியப் பொருட்களை வைத்து, ஜெர்மன் தொழில்நுட்பத்தில், சதாப்தி ரயில்களில் இணைக்க "அனுபூதி' என்ற பெயரில், உட்காரும் வசதிக் கொண்டகுளிர்சாதன வசதிக் கொண்ட பெட்டி தயாரிக்கப்பட்டது. இது, ரயில்வே வாரியத்திடம் கடந்த செப்டம்பர் மாதம் வழங்கப்பட்டது. மேலும் தில்லி - ஆக்ரா இடையே இயக்கப்படும், காதிமான், செமி புல்லட் ரயில் மற்றும் சதாப்தி ரயில்களுக்கு, எல்.எச்.பி., ஏசி "எக்ஸிகியூட்டிவ் லக்சுரி' பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
எதிர்காலத் திட்டங்கள்: வரும் காலத்தில், சென்னை ஐ.சி.எஃப். நிறுவனத்தில், நவீன தொழில்நுட்பத்தில், "அந்யோதயா', "தீன்தயாளு', "அனுபூதி' பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. அதன் பின், முழுவதும் அலுமினியத்தில், "ரயில் 20' திட்டத்துக்கான பெட்டிகள், உலகதரத்தில், தயாரிக்கவும் திட்டம் உள்ளதாக ஐ.சி.எஃப். மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


என்னென்ன வசதிகள் ?

ஒவ்வொரு இருக்கைக்கு பின்புறமும், சிறிய அளவில், 'எல்.சி.டி., டிஜிட்டல் தொலைக்காட்சி ' பொருத்தப்படுள்ளது. இத்துடன் பெட்டியின் மையப் பகுதியில், தனியாக, எட்டு, 'எல்.சி.டி., டிஜிட்டல் தொலைக்காட்சிகளும்' பொருத்தப்பட்டுள்ளன. ஹெட் போன் வசதி, மொபைல் போன் சார்ஜ் வசதியும் உள்ளது. ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப வசதியில், ரயில் போக்குவரத்து குறித்த, அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். 
பெட்டி முழுவதும், எல்.இ.டி., விளக்குள் பொருத்தப்பட்டுள்ளன. தானியங்கி கதவு வசதி உள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் உள்ளது போல் நவீன கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இருக்கையில் உள்ள பட்டனை அழுத்தினால், உதவி செய்வதற்கு ஊழியரும் உண்டு. 
பெட்டியில் பூசப்பட்டுள்ள வண்ணங்கள் எப்போதும் மாறாது. கீறல் ஏற்படாது. அழுக்கு படிந்தால் துடைத்துவிடலாம். மேலும் ரயில் பெட்டி, 160 கி.மீ., வேகத்தில், இயங்கக் கூடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com